விழுப்புரம்: ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது! மீட்பு பணிகள் தீவிரம்!!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தையை மீட்க தீயணைப்புப் படையினர் போராடிவருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த தியாகதுருகம் பள்ளகசேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது தோட்டத்தில் 500 அடி ஆழ்துளை கிணறு போட்டுள்ளார். ஆனால் அது மூடப்படாமல் இருந்தது.
இன்று காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் குழந்தை மதுமிதா அந்த ஆழ்துளை கினற்றில் தவறி விழுந்தது. இதனால் பதறிப் போன ராமச்சந்திரன் குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து சென்றனர். குழந்தை விழுந்த கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.
500 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 25 அடி ஆழத்தில்தான் குழந்தை சிக்கியிருப்பதால் உயிருடன் மீட்டுவிடலாம் என்று தீயணைப்புத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளில் 21 குழந்தைகள்
மூடப்படாத ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதிருஷ்டவசமாக இருவர் மட்டும் தப்பியிருக்கின்றனர்.
மரணக்குழிகள்
2009 பிப்ரவரி 22-ல் 6 வயது சிறுவன் மாயி, ஆண்டிபட்டி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 30 மணி நேரம் போராடியும் சிறுவன் உயிரிழந்தான். அதே ஆண்டு ஆகஸ்ட் 27-ல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான்.
உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்
2011 செப்டம்பர் 8-ம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான். 2012 அக்டோபர் 1-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா, உயிருடன் மீட்கப்பட்டான்.
சிறுமிகள் பலி
2013 ஏப்ரல் 28-ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதே ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வடமாநிலங்களில் 13 பலி
இதே போல வடமாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 13 குழந்தைகள் ஆழ்குழாய்க் கிணறுகளில் விழுந்து உயிரிழந்தன. இரு குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications