சீனாவை உலுக்கிய 17 குண்டு வெடிப்புகள்... 7 பேர் பலி.. மேலும் உயரும் என அச்சம்

Subscribe to Oneindia Tamil

லியுசூ : சீனாவில் அடுத்தடுத்து 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 7 பேர் பலியாகினர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் குவாங்சி மாகாணம் லியுசூ நகரில் அடுத்தடுத்து 17 இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் முழுவதும் கட்டிட இடிபாடுகளாகவும், புகைமூட்டமாகவும் காட்சி அளித்தன.

china blast

இந்த சம்பவத்தில், 7 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 51 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி என்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு, தீவிரவாதிகளின் சதித்திட்டம் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக வெய் என்ற 33 வயது சீன இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், சிறைகள் என பல இடங்களுக்கு அவர் வெடிகுண்டுகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சீனாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது., மேலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+