ரகம் ரகமாய் வந்து குவிந்து பட்டாசு தொழிலையே ரணகளப்படுத்தும் சீனா பட்டாசுகள்...
விருதுநகர்: தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் இருந்து ரகரகமாய் பட்டாசுகள் இந்தியாவிற்குள் பெருமளவு குவியத் தொடங்கியுள்ளன. இதனால் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டாசுதான். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும் 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பிற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வரி வருவாய் கிடைத்து வருகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக வேலை நடந்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து ரகம் ரகமாக பொம்மைகள், ஸ்கிராப், பழைய இரும்பு, என பெயர் மாற்றி 2 ஆயிரம் கன்டெய்னர்களில் முறைகேடாக பல்வேறு துறைமுகங்களில் வந்து இறங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வட மாநில ஆர்டர்களும் இதுவரை அதிக அளவு அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதால் 40 சதவீதம் வரை விற்பனை பாதித்துள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகை காரணமாக சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே சீன பட்டாசுகளை பிடித்துக் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, தமிழ்நாடு பட்டாசு தொழில் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. மேலும், சீன பட்டாசு விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மத்திய பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனமான, 'பெஸோ' கடிதம் எழுத உள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும், சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான சீன பட்டாசுகள், இந்திய வெடிபொருள் சட்டம் - 2008 விதிமுறைக்கு மாறாக, அதிக அளவு நச்சு தன்மை கொண்டவையாக, ஒலி மாசு ஏற்படுத்துபவையாக உள்ளன. அதனால், சந்தையில் சீன பட்டாசுகள் விற்பனையாவதை தடுக்க, தீவிர நடவடிக்கையை துவங்கி உள்ளோம். இது தொடர்பாக மாவட்டந் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும்; அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் எழுத உள்ளோம் என்று பெஸோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications