பாலியல் தொல்லையால் பல பாடகிகள் பாதிப்பு- சின்மயி பரபர புகார்
Recommended Video

சென்னை: பாலியல் தொல்லையால் பல பாடகிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாடகி சின்மயி பேஸ்புக் லைவில் புகார் தெரிவித்துள்ளார்.
#MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
பாடகி சின்மயியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்த குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
[திரைத்துறையை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாடகி சின்மயி பாலியல் புகார்! #MeeToo]
பார்த்த பிரச்சினைகள்
இந்நிலையில் சின்மயி பேஸ்புக் லைவில் தோன்றி இந்த புகார்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து உண்மைதான். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கேட்டால் தாங்கள் சந்தித்த அல்லது பார்த்த பிரச்சினைகளை கூறுவர்.

காது கொடுத்து கேளுங்கள்
சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு தொடர்பாக ஆண் குழந்தைகளுக்கு எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை. பாலியல் தொந்தரவு குறித்து பெண் குழந்தைகள் கூறினால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும்.

தயக்கம்
வைரமுத்துவால் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் சொல்ல தயங்குகின்றனர். அரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க எனக்கு அப்போது தைரியம் இல்லை. வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என்று கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் காட்டுகின்றனர்.

எப்படி கிடைக்கும்
பாலியல் தொல்லைகளுக்கு ஆதாரம் கேட்கிறார்கள் அதை எப்படி பெண்களால் தர முடியும். என் திருமணத்திற்கு மக்கள் தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அவரை திருமணத்துக்கு அழைக்கவில்லை எனில் அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டியிருக்கும்.

குற்றச்சாட்டுகள்
தவறுகளை தெரிவித்தால் தட்டிக் கேட்டால் அந்த பெண்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும் நான் ஏன் வெட்கப்பட வேண்டும். மீ டூ மூலம் ஏராளமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் சின்மயி.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications