சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராதிகா
சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து நடிகை ராதிகா ராஜினாமா செய்துள்ளார். ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார்.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் கடந்த 2011ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு இச் சங்கத்தின் தலைவராக ராதிகாவும் செயலாளராக நடிகை குஷ்பு போட்டியின்றி மீண்டும் தேர்வானார். சங்கத்தின் பொருளாளராக டி.ஆர். பாலேஸ்வர், துணைத்தலைவர்களாக குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார், இணை செயலாளர்களாக இ.ராமதாஸ், டி.வி.சங்கர் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக பி.ராதா, சுஜாதா கோபால், பி.சீனிவாசன், மனோபாலா, சீனிவாசலு, மதி ஒளி குமார், வெங்கடாச்சலம், ஜெயக்குமார், செய்யாறு ரவி, வினயா கிருஷ்ணன், ஜெயவேல், சதீஷ் ஆகியோர் தேர்வானார்கள்.
சங்கத்தின் காப்பாளர்களாக ஏ.வி.எம். சரவணன், டி.ஜி.தியாகராஜன், அழகன் தமிழ்மணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்ற போது கணவர் சரத்குமாருக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகர்களிடம் ஆதரவு திரட்டினார் ராதிகா. இதேபோல செயலாளர் குஷ்பு எதிரணியான விஷால் பக்கம் நின்றார். இதிலிருந்தே குஷ்புவிற்கும், ராதிகாவிற்கும் பிரச்சினை உருவானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ராதிகா. ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications