மத்திய அரசு ஒரு மோசமான நோயாளி - ப.சிதம்பரம் டைரக்ட் அட்டாக்
மத்திய அரசு ஒரு மோசமான நோயாளி என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்
சென்னை: தலைமைப் பொருளாதார ஆலோசகர் மருந்துகள் கொடுத்தாலும், நோயாளியான மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் சில நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்திடும் இறுதி பட்ஜெட் இதுவென்ற காரணத்தினால் அதிக எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவர், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் நலனுக்கானவை இடம் பெறவில்லை என்றார். மேலும் இது தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பட்ஜெட் என்றும் சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.
ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட் 2018 மத்திய அரசின் இயலாமை தன்மையை காட்டுகிறது எனவும் அவர் கடுமையாக விமர்சினம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசு ஒரு மோசமான நோயாளி என்றும், தலைமை பொருளாதார ஆலோசகராக சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மருந்துகளை ஏற்காமல் மத்திய அரசு தானாக மருந்தை உட்கொள்வதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் நிலைமை மிக மிக மோசமான கட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications