ஜிங்கில் பெல்... ஜிங்கில் பெல்... காரைக்குடி பள்ளி மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடியும், பாடியும், இனிப்பு வழங்கியும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.
இவ்விழாவிற்கு காரைக்குடி சகாய அன்னை ஆலய பங்குதந்தை அருட்திரு.G.வின்சென்ட் அமல்ராஜ் அவர்கள் தலைமையேற்றார். உதவி பங்குதந்தை திரு. ஜோசப் லாரன்சு அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திரு. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மகாராஜா ஆயில் மில் உரிமையாளர் திரு. பெவின் அவர்கள் மற்றும் சாமி மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு. சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். பள்ளிமேலாண்மைக் குழு தலைவர் திருமதி அழகுசுந்தரி அவர்கள், பள்ளிமேலாண்மை மற்றும் வளர்ச்சி குழுத் தலைவர் திரு.சகாயசெல்வன அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா
இவ்விழாவில் ஒன்பதாம்வகுப்பு மாணவி ஏ.மார்த்தாள்கிறிஸ்து பிறப்பைப் பற்றி நற்செய்தி வாசகம் வாசித்தார். மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடியும், பாடியும், இனிப்பு வழங்கியும் அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தனர்.

மாணவிகள் நடனம்
ஏழாம் வகுப்பு மாணவி எஸ். விருக்க்ஷா கிறிஸ்து பிறப்பு பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.ஆறாம் வகுப்பு மாணவர்கள் கிறிஸ்துமஸ் வந்தாச்சு என்றுஆனந்த நடனமாடினர். திரு. ஜெசோ சிமியோன் அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடிப்பாடி அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தார்.

மாணவர்களுக்கு பரிசு
இவ்விழாவன் சிறப்பு நிகழ்ச்சியாக மகாராஜா ஆயில் மில் உரிமையாளர் திரு. பெவின் அவர்கள் பள்ளிக்கு ப்ரொஜெக்டர்(Projector) வழங்கினார். மேலும் விருந்தினர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜெயராஜ் அவர்கள் ஏசுகிறிஸ்து மக்களுக்குச் சொன்ன போதனைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

மாணவர்கள் மகிழ்ச்சி
இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதிஜெயம் அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications