கிறிஸ்துமஸ் கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை !
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது.
திருச்சி சகாய மாதா பேராலயம், மதுரை புனித மரியன்னை தேவாலயம், பாஸ்டின் நகர் தூயபவுல் ஆலயம், நெல்லை, கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அனைத்த ஆலயங்களும் வண்ணவிளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications