கிரிக்கெட் விளையாட்டில் மோதல்: மருத்துவமனை கண்ணாடி உடைப்பு.. போலீஸ் குவிப்பு! ? - வீடியோ
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக நாமக்கல் அருகே மருத்துவமனை கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: சேந்தமங்கலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக மருத்துவமனை கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அருகே சேந்தமங்கலத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் சத்திரியன் உள்ளிட்டோர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனை அப்பகுதி மக்கள் விலக்கிவிட்டுள்ளனர். ஆனால் சிறுவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமகா மாறியது.
இதில் அப்பகுதியில் இருந்த மருத்துவமன சூறையாடப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் கலவரம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications