துணி காய வைப்பதில் சண்டை: புழலில் கைதிகள் மோதல்
சிறையில் துணியை துவைத்து காய போடுவதில் தகராறு ஏற்பட்டதை அடுத்து புழலில் கைதிகள் மோதி கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய புழல் சிறை வளாகத்தில் சிறை கைதிகளுக்கிடையே துணி காயப்போடுவது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.
துவைத்த துணிகளை புழல் சிறையில் கைதிகள் காயவைத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இதில் கொடுங்கங்கையூரை சேர்ந்த ஜோசப் என்ற கைதியை தண்டனை கைதிகள் 4 பேர் தாக்கியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல் பெண்கள் மத்திய சிறை காவலர் சசிகலா(50) என்பவரை தண்டனை கைதி ரேகா (26) தாக்கியதாக புழல் போலீஸாரிடம் ஜெயிலர் அல்லிராணி புகார் அளித்தார். காயமடைந்த சிறை காவலர் சசிகலா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications