வேலூர்: 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அருகே அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் கொணவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. இங்கு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் பயிற்சிக்காக வந்துள்ளார். இவர் பள்ளியில் 4-ம் வகுப்பில் பாடம் நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.

திங்கட்கிழமையன்று பள்ளிக்கு போகமாட்டேன் என சிறுமி அழுது அடம்பிடிக்கவே, இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்த போது பயிற்சி ஆசிரியர் பயிற்சி மாணவரின் அத்துமீறல் குறித்து சிறுமி கூறினாள்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளி முன்பு குவிந்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடக்க கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் பச்சையம்மாள், 4-ம் வகுப்பு ஆசிரியை ஜான்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக மாணவியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பயிற்சி மாணவர் இமானுவேல் கண்மணி என்பவரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+