நெடுவாசல் போராட்டத்தை கைவிடுங்கள்... முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்
நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.
விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

14வது நாள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 14 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டக்குழு சந்திப்பு
இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 11 பேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழு ஒன்று தலைமைச் செயலகம் வந்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது.

உறுதி
அப்போது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று பழனிச்சாமி உறுதி அளித்ததாக போராட்டக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஏற்க மறுப்பு
முதல்வர் அளித்த உறுதியை ஏற்க மறுத்த நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுத்து முறையான அறிக்கை வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் அறிவித்தனர்.

முதல்வர் வேண்டுகோள்
இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராடும் நெடுவாசல் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மக்களுக்கு விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்றும் போராட்டத்தை கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications