திமுகவின் செயல்படாத தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசை செயல்படவில்லை எனலாமா- முதல்வர் கேள்வி

திமுகவின் செயல்படாத தலைவராக உள்ள ஸ்டாலின் அதிமுக அரசை செயல்படவில்லை என்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மயிலாடுதுறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு-வீடியோ

    சென்னை: திமுகவின் செயல்படாத தலைவராக உள்ள ஸ்டாலின் அதிமுக அரசு செயல்படவில்லை என்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.

    மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் நடைபெறும் காவிரி நதி நீர் மீட்பு வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் அதிமுக அரசின் சட்டப் போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது.

    இத்தனை ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசின் நடவடிக்கையால் வெற்றி கிடைத்துள்ளது, காவிரி நீருக்காக போராடியது பலராக இருந்தாலும் தீர்வை பெற்று தந்தது அதிமுகதான். காவிரி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டு நாடகமாடியது திமுகதான். காவிரி விவகாரத்தில் போட்ட வழக்கை சுயநலத்துக்காக திமுக திரும்பப் பெற்றது.

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை

    யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தால்தான் அணையை திறக்க முடியும். திமுக ஆட்சியில் இருந்தபோது கூட மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சி

    திமுகவின் செயல்படாத தலைவர் அதிமுக அரசு செயல்படவில்லை என்கிறார். ஓராயிரம் ஸ்டாலின் முளைத்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. 16 மாதங்களில் முடியாததையா இனிமேல் ஸ்டாலின் செய்ய போகிறார்? என்னை போன்று ஆயிரம் பழனிச்சாமி அதிமுகவில் உருவாக முடியும். திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கலைக்க சில விஷமிகள் முயல்கிறார்கள்.

    சாதனை

    சாதனை

    டிடிவி தினகரன் அதிமுகவுக்காக உழைத்தாரா? இல்லை போராட்டங்களில் கல்நது கொண்டாரா? ஒருவரின் உறவினர் என்ற தகுதியுடன் மட்டுமே உடையவர் தினகரன். எத்தனை சதிகள் செய்தாலும் சதிகாரர்களுடன் செயல்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாகை மாவட்டம் பூம்புகார் செருதியூரில் நீர்நிலைகள் தூர்வாரப்படும். மருத்துவத் துறையில் சாதனை படைத்து வருகிறது அதிமுக அரசு.

    மருத்துவ முகாம்

    மருத்துவ முகாம்

    தனியார் மருத்துவமனையில் கூட செய்ய முடியாத அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்யப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம் நடத்தி நோய்கள் கண்டறியப்பட்டன. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏர்கலப்பை

    ஏர்கலப்பை

    அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது, மின் உற்பத்தியில் தமிழக அரசு சாதனை நிகழ்த்தி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் குறுவை தொகுப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.
    குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார். இவ்விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு ஏர்கலப்பை மற்றும் 2 மாடுகளை பரிசாக வழங்கினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+