காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
Recommended Video

கோவை: காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை காட்டிலும் 14.75 டிஎம்சி குறைவானதாகும். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி ஆற்றை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
தீர்ப்பு குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர் முடிவு எடுப்பார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்ய இயலாது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளேன்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. காவிரி தீர்ப்பில் சில விஷயங்கள் வரவேற்கத்தக்கது; சில விஷயங்கள் ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications