கருணாநிதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவருடன் துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
கருணாநிதி உடல்நல குறைவுகளால் நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95. காவேரி மருத்துவமனையிலிருந்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு சென்றது. அங்கும் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடல் சிஐடி காலனியிலிருந்து ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலும் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications