நீங்க என்ன செஞ்சீங்க.. ஆர்.கே நகரில் எடப்பாடி, ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்.. ஸ்டாலினுக்கு கேள்வி!
ஆர்.கே நகரில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாக்குபதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் பரபரப்பாக தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வேலுமணி, எம்.பி வேலுமணி ஆகியோர் இன்று புதுவண்ணாரப்பேட்டையில் ஒரே வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

டெபாசிட் கிடைக்குதான்னு பாருங்க
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என்கிற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். டெபாசிட் நாங்கள் வாங்குகிறோமா இல்லையா என்பதை மக்களிடம் பேசி நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.

மேயராக இருந்தபோது என்ன செஞ்சீங்க
ஆனால், சென்னை மாநகர மேயர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து ஆர்.கே நகரில் நீங்கள் என்னென்ன திட்டம் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று பதில் சொல்லத்தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

அம்மா வழி வந்த மதுசூதனன்
மேலும், அம்மா வழி வந்த மதுசூதனன் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களுக்கு மீண்டும் தேவையான நல்ல விஷயங்கள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

21 வருஷமாக பதவியே இல்லாத மது
21 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாத அண்ணன் மதுசூதனன் தற்போது மீண்டும் உங்கள் முன் ஓட்டுக்கேட்டு வந்து உள்ளார். அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது மக்களின் கடமை அதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications