தினகரன் அதிமுகவில் நீடிப்பாரா?.. அதை எடப்பாடி முடிவு செய்வார்... செங்ஸ் நெத்தியடி!
டிடிவி தினகரன் அதிமுகவில் நீடிப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருத்தணி: திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் டிடிவி தினகரன் அதிமுகவில் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 31 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஒருவழியாக ஜாமீன் கிடைத்து இன்று சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதிமுக கட்சி பணிகளில் மீண்டும் ஈடுபடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

எப்போதும் கட்சிப் பணிதான்
அதற்கு டிடிவி தினகரன் நான் எப்போதும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுதான் வருகிறேன். தற்போது ஒரு மாதம் சிறிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.

நீடிப்பேன்
நான் கட்சியில் துணை பொதுச் செயலாளராக நீடிப்பேன். கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், திருத்தணியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

எடப்பாடி முடிவு செய்வார்
அப்போது அவர் அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செ்வார் என்று தெரிவித்தார். இதிலிருந்து கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஒன்று திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெத்தியடி
சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர் செங்கோட்டையன். தற்போது அவர் தினகரனுக்கு எதிராக பேசியிருப்பது அதிமுக அம்மா வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications