சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்- முதல்வர் விளக்கம்
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.
Recommended Video

சென்னை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவும் ஆலைக்கு சீல் வைத்தோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அந்த அரசாணை நகலுடன் ஆலைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்தார். இதுகுறித்து சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மக்கள் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.
தூத்துக்குடியில் போராடிய மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தோர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினாலும் அரசு ஏற்பாடு செய்யும் என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications