ஆர்.கே.நகர் தொகுதிவாசிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர்: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 24,942 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தினையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியரும் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் 44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளும், 7106 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.
12.8.2015 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ், தண்டையார்பேட்டை (வார்டு எண்.38) மற்றும் புதுவண்ணாரப்பேட்டை (வார்டு எண்.39) பகுதிகளைச் சேர்ந்த 24,942 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதன் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார்.
மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்டேல் நகரில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு 142 மிதிவண்டிகள், திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு 232 மிதிவண்டிகள், புத்தா தெருவில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு 400 மிதிவண்டிகள், அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகளான தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள முருகதனுஷ் கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 410 மிதிவண்டிகள், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சௌந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 334 மிதிவண்டிகள், என மொத்தம் 1518 விலையில்லா மிதிவண்டிகளை 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதன் அடையாளமாக, 5 மாணவ, மாணவியருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா. வளர்மதி, எஸ்.பி. வேலுமணி, எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications