பிள்ளைகளை அழைச்சுட்டுப் போங்க! - பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் திடீர் அழைப்பு
சென்னை: சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிற்பகலுக்குப் பிறகு மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தன.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என நேற்று இரவு தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என மறுத்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.

இதைத் தொடர்ந்து சில தனியார் பள்ளி, கல்லூரிகளைத் தவிர மற்றவை வழக்கம்போல இயங்கின.
ஆனால் பிற்பகலுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என்றும், எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை அழைத்து, பிள்ளைகளை நேரத்துடன் கூட்டிச் செல்லுமாறு பிற்பகலில் கூறின. இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் பரபரப்புடன் பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் பிற்பகலிலேயே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications