அண்ணா பிறந்த நாளில் அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் 'அம்மா குடிநீர்'!

அத்தியாவசியப் பொருள்களின் விலை அநியாயத்துக்கு உயர்ந்து வருவதால், அவற்றை மலிவு விலையில் அரசு சார்பில் மக்களுக்கு வழங்கும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா அரிசி, நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மலிவு விலை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்மா உணவகம்
ஏழைகளும், கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு இட்லி, பொங்கல், தயிர் சாதம், சப்பாத்தி உள்பட பல்வேறு உணவு வகைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன.
இதுபோன்று ஏழை, எளிய மற்றும் பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்' உற்பத்தி நிலையங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ‘அம்மா குடிநீர்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ 10-க்கு
இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்டதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விற்பனை செய்யப்படும். சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் இந்த குடிநீர் விற்பனைக்குக் கிடைக்கும்.
ரெயில்வே நிர்வாகம் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.15-க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20-க்கும் விற்பனை செய்கின்றன. ஆனால் ‘அம்மா குடிநீர்' 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட உள்ளது.
அண்ணா பிறந்த நாளில்...
முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்தப்படி ‘அம்மா குடிநீர்' விற்பனை அண்ணா பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதன் தொடக்க விழா காலை 11.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா குடிநீர்' உற்பத்தி நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலாபால கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரஜ்கிஷோர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications