போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்குவோம்.. கையெழுத்து இயக்கம் தொடங்கினார் ஓ.பி.எஸ்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று கோரி ஒரு கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு போயஸ் கார்டன் வீடு. அவரது தாயார் காலத்தில் வாங்கப்பட்ட வீடு. இங்குதான் ஜெயலலிதாவின் அரசியல் சகாப்தம் தொடங்கி முடிந்தது. ஆனால் இந்த வீட்டை தற்போது சசிகலா குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.அங்கிருந்து வெளியேறாமல் உள்ளனர். ஜெயலலிதாவின் உறவினர்களிடம் வீட்டை ஒப்படைக்கவில்லை.

குறைந்தபட்சம் இந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் ஜெயலலிதா என்பதைக் கூட அவர்கள் முறையாக தெரிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சமீபத்தில் கூறுகையில் போயஸ் தோட்ட வீடு எங்களது அம்மா குடியிருந்த கோவில். அந்த வீட்டை நினைவிடமாக்குவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுதொடர்பாக ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அதில் தனது கையெழுத்தை முதலில் பதிவு செய்து தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை ஆளுநரிடம் சமர்ப்பித்து போயஸ் தோட்ட வீட்டை நினைவிடமாக்க கோரிக்கை விடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications