அதிமுகவை யாராலும் வெல்லமுடியாது- துணை முதல்வர் ஓபிஎஸ்
தலைமை செயலகத்தில் ஒ.பன்னீர் செல்வம் தனது அறையில் துணை முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வர் ஈபிஎஸ், அமைச்சர்கள் வாழ்த்து கூறினர்.
சென்னை: அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்று துணைமுதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு வந்து முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் அறைக்கு அருகிலேயே துணை முதல்வருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது அறைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஓ.பன்னீர் செல்வம் பைல்களில் கையெழுத்து போட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் நிலோபர் கபில், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன்னை 3 முறை முதல்வராக்கியதாக கூறினார்.
அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்றும், இரு அணிகளும் இன்று இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி என்று கூறினார். அதிமுகவை தாங்கிப் பிடிக்கும் தொண்டர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications