போயஸ் கார்டனில் ஓபிஎஸ், அமைச்சர்கள்: சசிகலாவுடன் ஆலோசனை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு வந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சசிகலாவும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தமிழகம் முழுக்க எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் போயஸ் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போயஸ் கார்டன் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாசல் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்னதாக, ஜெயலலிதா பொதுமக்களை சந்திக்கும் அதே இடத்தில் தற்போது சசிகலா நின்றுகொண்டு வந்திருந்த பொதுமக்களிடம் பேசினார்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் இருந்தனர். சசிகலா உடன் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications