நெல்லை மருத்துவமனையில் நவீன கருவிகள் சேர்ப்பு.. காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்
நெல்லை மருத்துவமனையில் பல்வேறு நவீன சிகிச்சை கருவிகளை முதல்வர் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை: மருத்துவமனையில் பல்வேறு நவீன சிகிச்சை கருவிகளை முதல்வர் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கான நவீன லேப் மற்றும் 16 நவீன சிலைஸ் சிடி ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் இன்று காணொளி முலம் திறந்து வைக்கிறார். இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன் கூறுகையில், இங்கு இருதய பிரிவில் அமைக்கப்படும் கேத் லேப் மூலம் இருதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய முடியும்.

மேலும் தொடர்ச்சியாக தேவைப்படுபவர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்து ஸ்டெண்டு பொருத்தும் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 முதல் 5 லட்சம் வரை செலவாகும். இந்த வசதி தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதுவரை இல்லை.
நெல்லையில் முதன் முறையாக இங்கு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பயனாளிகள் மற்றும் பிற பயனாளிகளும் இலவசமாக செய்து கொ்ள்ளலாம். மேலும் தற்போது நிறுவப்பட்டுள்ள சிலைஸ் சிடி ஸ்கேன் 16 போக மேலும் 16 சிடி ஸ்கேன்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த வசதிகளால் தென்மாவட்ட மக்களுக்கு கூடுதல் உயர் சிகிச்சைகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications