நாங்களும் சந்திப்போம்ல… மோடி- பழனிச்சாமி பரபர சந்திப்பு... அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை
டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமி இன்று மோடியை சந்தித்தார். இதில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தல் வர உள்ளதால், அரசியல் குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர்.
அப்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவே பிரதமரை சந்தித்ததாக ஓபிஎஸ் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்
ஆனால், டெல்லி சென்று வந்த 2 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி பாஜகவிற்கு ஆதரவளிக்கும் என்று டுவிட்டரில் தகவல் பதிவிட்டப்பட்டது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி பயணம்
பரபரப்பான இந்தச் சூழலில், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று காலை 11.30 மணிக்கு பிரதமரை முதல்வர் சந்தித்தார்.

என்ன கோரிக்கை
இந்த சந்திப்பின்போது வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிச்சாமி விவாதித்ததாக கூறப்படுகிறது. அவருடன் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்
மோடியுடனான சந்திப்பில், ஜூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் அது குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் டெல்லி சென்று மோடியை சந்தித்து பேசி வந்த பின்னர், அதற்கு போட்டியாக பழனிச்சாமி சென்று சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications