ஸ்டாலினை நான் பார்க்க மறுக்கவில்லை... ஊடக பரபரப்புக்காக நாடகம்- முதல்வர்
ஸ்டாலினை நான் பார்க்க மறுக்கவே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினை நான் பார்க்க மறுக்கவே இல்லை. ஆனால் ஊடக பரபரப்புக்காக என் அறையின் முன்பு அமர்ந்து நாடகம் நடத்துகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 13 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு முதல்வர்தான் பொறுப்பு என்று அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

ஸ்டாலின் கோரிக்கை
முதல்வரை சந்திக்க நேரம் கொடுக்க வேண்டும் என்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு முதல்வர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த ஸ்டாலின் முதல்வர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஸ்டாலின் கைது
தலைமை செயலகத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். அவர் அங்கிருந்து ராயபுரம் சமூக நல கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தலைமை செயலகத்தில் பேட்டி
மு.க.ஸ்டாலின் தர்ணா குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் காலை 11 மணிக்கு சட்டசபை தலைவர் அறையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நான், துணை முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பங்கேற்றோம்.

அரசியல் நாடகம்
திடீரென எதிர்க்கட்சி தலைவர் அங்கே அமர்ந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நான் பங்கேற்றபோது எனது அறைக்கு வெளியே தர்ணா செய்துள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு ஏன்
நான் அவரை சந்திக்க மறுப்பதாக உண்மைக்கு புறம்பான தகவலை ஊடகங்களுக்கு ஸ்டாலின் அளித்துள்ளார். துப்பாக்கிச் சூடு பாதுகாப்பாக நடத்தப்பட்டது. திட்டமிட்டு நடத்தப்படவில்லை. யாரும் உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று அந்த சம்பவத்தை நியாயப்படுத்தி எடப்பாடி பேசியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications