“கம்பை இங்க கொஞ்சம் கொடுங்க”.. சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி வந்த முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வழியில் மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றிய நிலையில், அந்த மாணவிகளிடம் சிலம்பத்தை பெற்று ஆர்வமாகச் சுற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திடீரென சிலம்பத்தை வாங்கி முதல்வர் சுழற்றத் தொடங்கியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் தகித்து வருகிறது. பல்வேறு கட்சிகளும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளும் திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது தென் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை தென்காசி சென்றடைந்த மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

mk stalin tenkasi

தமிழக முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ஆய்க்குடி செல்லும் வழியில் அனந்தபுரம் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். 445 கோடி ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்படும் என்றும், 575 கோடி ரூபாய் முடிவடைந்த திட்டப் பணிகளை திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1,020 கோடி ரூபாய்க்கு மேல் தென்காசிக்கு நலத்திட்டங்கள் கிடைக்கவுள்ளது.

தென்காசி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தபோது, கழுநீர்குளம் பகுதிகளில் மாணவ மாணவிகள், முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் வகையில் சிலம்பம் சுற்றினர். காரில் இருந்து இறங்கி அதை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவிகளிடம் சிலம்பத்தை பெற்று ஆர்வமாகச் சுற்றினார். திடீரென சிலம்பத்தை வாங்கி முதல்வர் சுழற்றத் தொடங்கியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சீவநல்லூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் ஒரு பகுதியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து முதல் மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி பிரேமவிற்கு வீடு கட்டி தரப்படுகிறது. இதனை நேரில் சென்று பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமா, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் பங்கேற்றபோது, முதல்வர் ஸ்டாலினிடம், தன்னுடைய தந்தைக்காக ஒழுகாத வீடு வேண்டும் என்று கோரியிருந்தார். தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்த என் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வாழ்ந்து வருவதாகக் கூறி கண்ணீர் விட்டார். இதனைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அந்த மேடையிலேயே மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டை ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு வீட்டிற்கான அஸ்திவாரம் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வீடு கட்டும் பணிகள் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+