தமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்!
தென்காசி: தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.
சுற்றுலாத்துறை கடந்த மாதங்களாக தமிழ்நாடு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு சவால் விடுத்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கடந்த வருடம் தாஜ்மாஹாலை விட மஹாபலிபுரத்தைதான் மக்கள் அதிகமாக விசிட் செய்துள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாடு சுற்றுலா துறையில் டாப்பில் உள்ளது.

சுற்றுலா
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மெரினாவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரைக்கு ரோப் கார் அமைக்கப்படும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இது மத்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் திட்டம் ஆகும். அதேபோல் பழனி மலையில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப் கார் கொண்டு வரப்பட உள்ளது. யோசித்து பாருங்கள் மலைகளுக்கு இடையிலும், கடலுக்கு மேலிலும் ரோப் காரில் சென்றால் எப்படி இருக்கும்? அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

நடவடிக்கை
தமிழ்நாடு அரசும் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தென்காசியில் உள்ள குற்றாலம் அருவி மொத்தமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. குற்றாலம் (Courtalam), தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். தமிழ்நாட்டின் டாப் சுற்றுலாதளங்களில் இதுவும் ஒன்று மழை காலத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வருவார்கள். பெண்கள், ஆண்கள் குளிக்க தனி தனியாக வசதிகள் இங்கு செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. திருக்குற்றாலக் குறவஞ்சி என்று தமிழ் சிற்றிலக்கியங்களில் சங்ககாலங்களில் கூட பாடப்பட்ட அருவி ஆகும் இது.

குற்றாலம்
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம் ஆகும். இந்த மரம் அதிகமாக இருக்கும் காட்டு பகுதியில் இந்த அருவி அமைந்து இருப்பதால் இந்த இடத்திற்கு குற்றாலம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த குற்றாலம் அருவிக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வருவதால் இங்கே சீரமைப்பு பணிகள் பெரிதாக செய்யப்படவில்லை. அதேபோல் மக்கள் கூட்டம் காரணமாக இந்த இடமும் அசுத்தமாக காணப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள், வீசப்பட்ட உணவு பொருட்கள் என்று இந்த இடம் சுத்தமின்றி காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதியை புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.மொத்தமாக இந்த பகுதியின் தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றம்
அதன்படி குற்றாலம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மாற்றப்பட உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் சாலைக்கு புதிதாக சாலை போடப்பட உள்ளது. அருவி இருக்கும் பகுதி அலங்காரம் செய்யப்பட உள்ளது. அங்கே புதிய உடை மாற்றும் அறைகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் வெளியே கடைகள் வைப்பதற்கான காம்பிளக்ஸ் மாற்றப்பட உள்ளது. இந்த பகுதியில் சிறிய பூங்கா, விளையாடும் பகுதிகள் போன்ற அமைப்புகளும் வைக்கப்பட உள்ளன.

ஏற்பாடு
அதேபோல் இங்கே அலங்கார வளைவுகள், அமைப்புகள், சிலைகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஹோட்டல்கள், தாங்கும் விடுதிகள் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருடம் முழுக்க இங்கே பல லட்சம் பயணிகள் வருகின்றன. இதனால் மேலும் பயணிகள் வருவதை ஊக்குவிக்கும் விதமாக இங்கே மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதற்கான பணிகள் இங்கே விரைவில் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றாலம் மேம்ப்படுத்தப்படும் பட்சத்தில் அது தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு ஜாக்பாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications