விஜய் அண்ணா பாணியில் அரசியல் புரட்சி.. 60 ஆண்டுக்கு பின் அதே பராபவ ஆண்டில் நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1967ம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணாதுரை தமிழக முதல்வராக பதவியேற்ற அதே பராபவ தமிழ் வருடத்தில் விஜய் முதல்வராக மே மாதத்தில் பதவியேற்றுள்ளார். அதாவது பராபவ ஆண்டின் இறுதியில் அண்ணா பதவியேற்றார். திராவிட ஆட்சி ஆரம்பம் ஆனது பராபவ ஆண்டின் இறுதியில் தான். ஆனால் திராவிட ஆட்சி சரியாக 60 ஆண்டுகள் கழித்து அதேபராபவ ஆண்டில் மாறி உள்ளது. திராவிட கட்சிகள் இல்லாமல் ஒரு அரசு அமைந்துள்ளது என்று ஆன்மீக பெரியவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தவெக தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் 18வது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீக், காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதல்வராக பதவியேற்று உள்ளதை விஜய் ரசிகர்கள், தவெக நிர்வாகிகள் கொண்டாடுகிறார்கள். விஜய் பதவியேற்ற இன்றைய நாள் அன்னையர் தினம் என்றும், அவரது அம்மாவிற்கு மிகச்சிறந்த பரிசு விஜய் வழங்கிவிட்டதாகவும் தவெகவினர் நெகிழ்கிறார்கள்.

CM Vijay Replays 1967 History repeats in Parabhava year as Thalapathy recreates Anna s miracle

மறுபுறம் அண்ணா பதவியேற்ற அதே பராபவ தமிழ் வருடத்தில் விஜய் முதல்வராக பதவியேற்று உள்ளதாகவும், 60 ஆண்டுகளுக்குப் பின் 'பராபவ' ஆண்டில் பெரிய அரசியல் புரட்சி நடந்தள்ளதாகம் கொண்டாடுகிறார்கள் தவெகவினர். தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ம் ஆண்டு என்பது ஒரு சகாப்தத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி அன்று தான் முடிவுக்கு வந்தது. அதாவது டெல்லியில் உள்ள தேசிய கட்சி தமிழ்நாட்டை ஆண்டது அதுதான் கடைசி..

60 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா ஏற்படுத்திய அரசியல் மாற்றம் சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்று 2026-லும் அரங்கேறி இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஆன்மீகப் பெரியோர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

1967-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி, அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது நிலவிய தமிழ் ஆண்டு 'பராபவ' (60 ஆண்டு சுழற்சியில் 40-வது ஆண்டு). 1967 மார்ச் என்பது பராபவ ஆண்டின் இறுதிக்காலமாகும். அன்று காங்கிரஸ் கட்சியில் நிலவிய அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை வீழ்த்தி, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை பேரறிஞர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தமிழ் வருடப் பஞ்சாங்கத்தின்படி, வருடங்கள் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும். அந்த வகையில் 1967-க்குப் பிறகு, சரியாக 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே 'பராபவ' ஆண்டு தற்போது 2026-2027-ல் வந்துள்ளது. 1967ல் காங்கிரஸ் கோட்டை தகர்ந்தது.2026ல் திராவிடக் கட்சிகளின் கோட்டை தகர்ந்துள்ளது.

1967-ல் அண்ணா ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய அதே 'பராபவ' ஆண்டில், இன்று விஜய் அவர்கள் முதல்வராகப் பதவியேற்பது அவரது தொண்டர்களிடையே ஒரு மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த சுழற்சி, தமிழக அரசியலில் பெரிய மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. அண்ணா எப்படி ஒரு புதிய திராவிடப் பாதையை அமைத்துக் கொடுத்தாரோ, அதே 'பராபவ' ஆண்டில் விஜய் ஒரு ' பாதையை அமைத்திருப்பதாக நெட்டிசன்களால் வியப்புடன் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+