அரசியல் நாகரீகம்.. சீமானை வீட்டிற்கே சென்று சந்தித்த முதல்வர் விஜய்! நெகிழ்ந்த தம்பிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார். அப்போது விஜய்யை சீமான் ஆரத்தழுவி வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். முதல்வர் விஜய்க்கு சீமான் புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார். சுமார் 10 நிமிடங்கள் இருவரும் சந்தித்து பேசினர். முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாசையும் அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பேசினார்.

தமிழக முதல்வர் விஜய் அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக அரசியல் களத்தில் நேர் எதிரில் நின்றவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்து பேசினார்.

CM Vijay Visits Seeman at His Residence NTK Cadres Emotional - Political Courtesy

தலைவர்களின் வீட்டிற்கே சென்று விஜய் சந்தித்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விஜய் நேரில் சந்தித்தார். விஜய்யை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்ற சீமான், ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் கைகோர்த்தபடி வீட்டிற்குள் சென்றனர்.

முதல்வர் விஜய்க்கு சீமான் புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார். சுமார் 10 நிமிடங்கள் இருவரும் சந்தித்து பேசினர். தவெக தலைவரும் முதல்வருமான விஜயயை அரசியல் களத்தில் மிகக்கடுமையாக சீமான் விமர்சித்தார். சீமான் கட்சியினரும் விஜய் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்த நிலையிலும், சீமானை வீட்டிற்கே சென்று விஜய் சந்தித்து இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

சீமான் அரசியல் களத்தில் விமர்சனம் செய்தாலும் தனிப்பட்ட முறையில் தம்பி என்றே விஜய்யை பலமுறை குறிப்பிட்டு பேசுவதை பார்க்க முடியும். முன்னதாக அன்புமணி ராமதாசும் விஜய்யை வீட்டு வாசலுக்கு வந்து அழைத்து சென்றார். அப்போது அவரது மனைவியும், சட்டமன்ற உறுப்பினருமான சவுமியா அன்புமணியை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களையும் விஜய்யுடன் அறிமுகம் செய்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+