தீவிரவாதிகளுடன் மோதல் - காயமடைந்த இன்ஸ்பெக்டரை ஜெ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

புத்தூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க தமிழக போலீஸ் படை சென்றபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும்மோதல் மூண்டது.
இதில் வீட்டுக்குள் நுழைந்து பிலால் மாலிக்கைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் லட்சுமணன் முயன்றார். அப்போது அவரை பிலால் மாலிக் கடுமையாக தாக்கினார். குக்கர் உள்ளிட்டவற்றால் தாக்கியதில் படுகாயமடைந்தார் லட்சுமணன்.
தற்போது லட்சுமணன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
கடவுள்தான் லட்சுமணனை காப்பாற்றியுள்ளார் -ஜெ.
லட்சுமணனை சந்தித்த ஜெயலலிதா, பின்னர் அவரது மனைவி மதுபென், தாயார் தனலட்சுமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் லட்சுமணனின் வீரத்தை பாராட்டி மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் வெகுமதியை அளித்தார்.
மேலும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார். எதிர்காலத்தில் காவல்துறைக்கு லட்சுமணன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications