சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்!
சென்னை: நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் , இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேசிய விருதை தமிழகத்தின் கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது.
கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக இரண்டு தேசிய விருதுகளை கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தான். 1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம் ஆகும். கோ ஆப்டெக்ஸ்க்கு நாடு முழுக்க 200 இடங்களில் ஷோரூம்கள் உள்ளது.
கடந்த பல வருடமாக கோ - ஆப்டெக்ஸ் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக சகாயம் பொறுப்பேற்றார்.இன் பிறகு, கைத்தறி சேலை மற்றும் துணிகளை தயாரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதனால், கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி கிடைத்தது. அதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார் சகாயம்.
அடுத்த கட்டமாக, கைத்தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்தார்.
முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ்.
இந்த விருதுகளை, டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ். தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் வழங்கினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications