காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் பெண் எஸ்ஐயிடம் அசிங்கமாக நடந்த ஏசி.. கமிஷனர் அதிரடி!

கோவை நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது கூட்டத்தை பயன்படுத்தி பெண் எஸ்ஐயிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை பெண் எஸ்.ஐ. மீது அத்துமீறி கை வைத்த உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. உதவி ஆணையர் பொறுப்பில் இருந்த ஜெயராமனை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் கோவை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கடும் முயற்சி எடுத்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Coimbatore ACP Jayaraman put under waiting list

இதனை பயன்படுத்தி பெண் எஸ்.ஐ.ஒருவரை உதவி ஆணையர் திட்டமிட்டு, கண்ட இடங்களிலும் கை வைத்து, தள்ளினார். அப்போது அந்த அதிகாரியை பெண் எஸ்ஐ தடுக்க முயற்சி செய்தார். ஆனாலும் அந்த அதிகாரி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்டார். பல முறை தகாத முறையில் நடந்து கொண்டார்.

பெண் எஸ்.ஐ.யிடம் உதவி ஆணையர் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பொது இடத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல், இதுபோன்ற அநாகரிகமான செயலில் ஈடுபடும் உயர் அதிகாரி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உதவி ஆணையர் ஜெயராமனை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ். அவருக்கு பணியிடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+