கேரளாவுக்கு சென்று வந்த கோவை பெண், மகனுக்கு பன்றிக் காய்ச்சல்
கோவை: கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்த கோவையைச் சேர்ந்த தாய் மற்றும் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கோவை டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேட்டைச் சேர்ந்த 40 வயது பெண் தனது கணவர் மற்றும் 10 வயது மகனுடன் கடந்த வாரம் கேரளாவுக்கு சென்றார். கேரளாவில் உறவினர் வீட்டில் இருந்துவிட்டு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினர். ஊர் திரும்பியதில் இருந்து அந்த பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் காய்ச்சலாக இருந்தது.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவினாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாயும், மகனும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் இது 3வது பன்றிக்காய்ச்சல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு மருத்துவமனையில் தேவையான மருந்துகள் உள்ளதுடன், மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதால் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications