கோவையில் தங்கத்தால் மின்னிய கோயில்.. கள்ளக்குறிச்சி மரத்தில் ஆடு தொங்குதே? கிளியூரில் வினோதம்
கள்ளக்குறிச்சி: சித்திரை மாதம் துவங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், தேர்த் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.. வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாக்களிலும், அதன் வழிபாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள. அந்தவகையில், கோவை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த திருவிழாவை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தமிழ் வருடத்தின் 12 மாதங்களின் முதல் மாதமாக உள்ளது சித்திரை.. ஆண்டின் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குரோதி வருடம் முழுமையடைந்து விசுவாவசு வருடம் துவங்கியிருக்கிறது.

அந்தவகையில், விசுவாவசு வருடத்தின் முதல் நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேர்த்திருவிழா நடைபெற்றது.. இதனால் பொதுமக்கள் அதிகாலையீலேயே கோவில்களில் வழிபாட்டில் ஈடுபட்டனர்..
தங்க நகைகள், ரூபாய் நோட்டுகள்
அந்தவகையில், கோவை மாவட்டத்திலும் பல்வேறு கோயில்களில் சித்திரை விஷு கனி காணுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.. இதில், காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த விழா, பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இங்கு அம்மனுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிறகு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் மூலஸ்தானம் முழுவதுமே, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளாலும், தங்க நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டதுடன், இந்த தங்க நகை, ரூபாய் நோட்டுக்களை மலைத்து பார்த்தனர்.
கிளியூர் கிராமம் மாரியம்மன்
அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்திலும், தேர்திருவிழா சிறப்பாக நடந்தது.. இங்குள்ள மாரியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றதாகும்.. இந்த வருடத்துக்கான திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.. அப்போதிருந்து தினந்தோறம் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.. பெண்கள் அனைவரும் பொங்கல் படையலிட்டு கொண்டிருக்கும்போதே, திடீரென மழை கொட்டியது.. காற்றும், மழையும் என ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொழிந்தது.. எனினும், மழையில் நனைந்தபடியே பெண்கள் பொங்கல் வைத்தனர். நெருப்பு அணியாமல் இருப்பதறகாக துணியை பிடித்தபடியே பொங்கல் வைத்து வருகின்றனர்.
ஆட்டுக்கு அலகு
இந்த திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வு ஆட்டுக்கு அலகு குத்துவதாகும்.. அதாவது, குளக்கரையில் இருந்து அக்னி கரகம் கோவிலை வந்தடைந்ததுமே, 30 அடி உயர மரத்தில் ஆட்டிற்கு அலகு குத்தி தொங்க விடுவார்கள். பிறகு அனைவரும் சேர்ந்து கயிற்றை பிடித்துக்கொண்டு, மரத்தை சுற்றிவரும்போது, ஆடு தலைக்கு குளிர்ச்சி எந்த திசை பார்க்கிறதோ அந்த திசையில் விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதன்படியே, இந்த திருவிழாவிலும் ஆட்டை 30 உயரத்துக்கு கட்டி தொங்கவிட்டு வழிபாடு நடத்தினார்கள்... இந்த திருவிழாவிற்கு ரகுநாதபுரம், பூவனூர், வடமாம்பாக்கம், குன்னத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications