இந்து முன்னணி பிரமுகர் கொலை.. கோவையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது - டிஜிபி பேட்டி
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டதையடுத்து தற்போது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
கோவை அருகே சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் (35), வியாழக்கிழமை இரவு சிலரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோவை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுனர்.
கோவை, திருப்பூர், மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனையடுத்து கலவரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே டிஜிபி டிகே ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டியில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. சட்டம் ஒழுங்கு 100 சதவிதம் கட்டுக்குள் உள்ளது என்று கூறிஉள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications