என்னுடன் திருமாவளவன் வந்து வாழ வேண்டும்... கோவைப் பெண் மீண்டும் பரபரப்பு
சென்னை: என்னுடன் நான்கரை வருடங்களாக நெருக்கமாக வாழ்ந்து விட்டு, என்னிடமிருந்து ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் தனது ஆட்களோடு சேர்ந்து பறித்து விட்டு இப்போது என்னை ஏற்க மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக அவருடைய அலுவலகம் முன்பு தொடர் தர்ணா நடத்தப் போகிறேன் என்று கோவையைச் சேர்ந்த பெண் மீண்டும் அறிவித்துள்ளதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் 34 வயதான கவிதா. இவர் சில மாதங்களாக திருமாவளவன் மீது பரபரப்பான புகாரைக் கூறி வருகிறார். இந்த சர்ச்சை பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இவர் திருமாவளவன் மீது ஏற்கனவே கோவை கமிஷனர் அலுவலகத்திலும், சென்னையில் உள்ள போலீஸ் டிஜிபி அலுவலகத்திலும் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்தார்.
இதுகுறித்து கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமாவளவன் கடந்த நாரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத்தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன்.
என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது என்கிறார்.
ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர். என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.
என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நான் எங்கு சென்றாலும் அந்த பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார். முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன்.
என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலீசில் 10 தடவை புகார் செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவகத்தில் இன்று முதல் தர்ணா போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்றார் அவர்.
இதையடுத்து அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
நீர் அடித்து நீர் விலகுமா? பனையூர் பாபு விலகல்! முடிவை மதிக்கிறேன்! ஆனால்.. சிந்தனை செல்வன் அட்வைஸ்! -
Panaiyur Babu: விசிகவின் "வெளிச்சம்"! திருமாவளவனின் நம்பிக்கை நட்சத்திரம்! யார் இந்த பனையூர் பாபு? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications