கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை மீது பக்தர்கள் ஏறிச்செல்ல கலெக்டர் தடை!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலை ஏறுவதற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார்.
கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் தீபங்கள் ஏற்றப்படும். அத்துடன் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிப்படுவது வழக்கம்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியாக சிவன் திருவண்ணாமலையில் வீற்றிருப்பதாக ஐதீகம். அன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை மீது ராட்சத கொப்பரையில் டன் கணக்கில் நெய் ஊற்றி ஏராளமான வேட்டிகளை திரியாக இணைத்து தீபம் ஏற்படும்.
இந்த தீபமானது காற்று, மழை வந்தாலும் அணையாமல் அப்படியே இருப்பது சிவனின் அருளால் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தீபத் திருநாளை காண
பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே மலையேறி காத்துக் கொண்டிருப்பர். இதையடுத்து மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில் மலையேறும் பக்தர்களுக்கு போதிய பாதிகாப்பு அளிக்க முடியாத சூழல் இருப்பதால் மலையேறி சென்று தீபத்தை பார்க்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார்.
மேலும் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் வழங்கவும் ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications