முட்டை, வாழைப்பழம் தராத நர்ஸ், சமையல்காரர் டிரான்ஸ்பர்!
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்காக வழங்கப்படும் முட்டை, வாழைப்பழம் போன்றவற்றை அவர்களுக்குத் தராத நர்ஸ் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில், தரம் குறைந்து இருப்பதாக, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்திக்கு புகார் சென்றது. இதையடுத்து வியாழக்கிழமை மருத்துவமனையில், அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவு முதல், அனைத்து வார்டுகளையும் ஆய்வு செய்த கலெக்டர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவோரிடம், சிகிச்சையின் தரம் குறித்து விசாரித்தார்.
அப்போது,பச்சிளங்குழந்தைகள் வார்டில், குழந்தைகளை பாதுகாக்க இருக்க வேண்டிய சில உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது என செவிலியர்கள் தெரிவித்தனர். பின்னர், சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டதில், உணவு பொருட்கள் இருப்பு, சாதம், கீரை, பருப்பு சாம்பார், பொரியல், முட்டை, வாழைப்பழம், தயிர் ஆகியவற்றின் இருப்பு குறித்து, சமையலர் சிவலிங்கம், சமையல் கூட பொறுப்பு செவிலியர் தனபாக்கியம், சமையல் உதவியாளர் கண்ணம்மாள் ஆகியோரிடம் விசாரித்தார்.
அப்போது, இரண்டு நாட்களாக, நோயாளிகளுக்கு முட்டை மற்றும் வாழைப்பழம் வழங்காமல் இருப்பது தெரியவந்தது. இதை கேட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நோயாளிகளுக்கு, இரண்டு நாட்களாக முட்டை மற்றும் வாழைப்பழம் வழங்கவில்லை. இவற்றை பெற்றுத் தரும் அலுவலர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. சமையலும் தரமானதாக இல்லை.
எனவே, சமையலர் சிவலிங்கம், செவிலியர் தனபாக்கியம், ஏ.ஓ., கண்ணம்மாள் ஆகிய மூவர் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சமையலர் சிவலிங்கம் ராசிபுரத்துக்கும், செவிலியர் தனபாக்கியம் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications