தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 தேதி வரை நடைபெற இருந்த அனைத்து கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 25 தேதி வரை நடைபெற இருந்த அனைத்து கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

College exams has been canceled in Thoothukudi District: Manonmaniyam Sundaranar university

இதனால் மக்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர். தூத்துக்குடியில் எப்போது இயல்புநிலை திரும்பும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் நாளை முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+