பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: கல்லூரி பேராசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், குத்தாலத்தில், டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜூ (வயது 50). பூம்புகாரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த கல்லூரியில் பொருளியல் துறை தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி பிரசன்னலெட்சுமி. இவர் குத்தாலத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் சில்மிஷம்

கிருஷ்ணராஜூவின் மனைவி பிரசன்னலெட்சுமி நடத்தி வரும் பள்ளி வளாகத்தில் மாலை நேரங்களில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கிருஷ்ணராஜூ டியூசன் எடுத்தார். அந்த டியூசன்சென்டரில் படித்து வந்த மாணவிகளிடம் பேராசிரியர் கிருஷ்ணராஜூ சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவிக்கு மிரட்டல்

இந்த நிலையில் நேற்று முன் தினம் குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை பகுதியை சேர்ந்த சிவா மகள் பிரியா (வயது 14) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்கிற 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கிருஷ்ணராஜூ சில்மிஷம் செய்ததோடு, மாலை 6 மணிக்கு மேல் நீ மட்டும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதனால் மிரண்டு போன மாணவி மஞ்சு, அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதுகுறித்த மாணவியின் பெற்றோர் குத்தாலம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமணி விசாரணை மேற்கொண்டார்.

பேராசிரியர் கைது

குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் கிருஷ்ணராஜூவை கைது செய்தனர். பின்னர்அவர் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+