வருகிறது தை.... பொங்கல் பொங்க, பொங்கப் பானைகள் ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நெருங்கி வருகின்ற தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை தயாரிப்பு மும்முரமடைந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகமெங்கும் மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று, வீட்டு வாசலில் அடுப்பு தோண்டி மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவது வழக்கம்.

முதன்மைத் தொழில்:

முதன்மைத் தொழில்:

தமிழ்நாட்டில் களிமண்ணில் கைவினைகள் செய்யும் குடும்பங்களுக்கு மண் பானை, சட்டி, அடுப்பு செய்வது பிரதான தொழில்.

விதம்விதமான பானைகள்:

விதம்விதமான பானைகள்:

பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ, 2 கிலோ அரிசி பானைகளும், ஒத்தை மற்றும் இரட்டை அடுப்பு, தொட்டி அடுப்புகள் செய்யப்படுகின்றன.

விற்பனை விலை:

விற்பனை விலை:

அதில், பானைகள் 30 முதல் 40 ரூபாய் வரையும், அடுப்புகள் 40 முதல் 100 ரூபாய் வரையும், சட்டிகள் 30 முதல் 50 ரூபாய் வரையும் விற்கிறனர்.

பாரம்பரிய பானை கிராமம்:

பாரம்பரிய பானை கிராமம்:

தமிழகத்தில் மண் பானைகள் மட்டுமே தயாரிக்க குமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் இருப்பது பலருக்கும் தெரியாது. நாகர்கோவில் , திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் அடுத்த சுங்கான்கடை தான் அந்த பாரம்பரியத்துக்குரிய கிராமம்.

ஆண்டு முழுவதும் தயாரிப்பு:

ஆண்டு முழுவதும் தயாரிப்பு:

இங்கு திரும்பிய திசையெல்லாம் மண் பானை தயாரிப்புதான். இது பொங்கல் பண்டிகைக்கான தயாரிப்பு மட்டும் அல்ல. ஆண்டு முழுவதும் மண் பானை தயாரிப்புதான்.

குறைந்துபோன தயாரிப்பு:

குறைந்துபோன தயாரிப்பு:

ஆனால், இப்போது பித்தளை, சில்வர் பாத்திரங்கள் வந்துள்ளதால் மண் பாண்டங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

நசிந்துள்ள பானைத் தொழில்:

நசிந்துள்ள பானைத் தொழில்:

இதனால் மண்பானைகளைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. களிமண் சரிவரக் கிடைக்காததால் இத்தொழில் நசிந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+