இ போஸ்ட்ல ஹேப்பி பொங்கல் சொல்லுங்க! அழைக்கிறது இந்திய தபால் துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை வந்தாலே வாழ்த்து கார்டுகளை வாங்கி சொந்த பந்தங்களுக்கு அனுப்புவதே தனி சுகம். பொங்கல் வாழ்த்துக்களைப் போட தனி பெட்டிகளை வைத்த காலமும் தபால் நிலையங்களில் இருந்தது. இன்றைக்கு அந்த காலம் மலையேறிவிட்டது.

தகவல் தொடர்பு வளர்ச்சியினால் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இ மெயில், வாட்ஸ் ஆப் வசதிகளில் இப்போது வாழ்த்துக்கள் குறைவில்லாமல் வந்து குவிகின்றன.

அப்படியே சிலர் வாழ்த்து அட்டைகளை அனுப்பினாலும் கூரியரில் அனுப்பிவிடுகின்றனர். இதனால் வருத்தமடைவது என்னவோ இந்திய தபால்துறைதான்.

Come and say happy Pongal through E post

பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் பிறந்த தினம், நாளன்று மின்னணு அஞ்சல் சேவை (இ-போஸ்ட்) மூலம் வாழ்த்துக்களை அனுப்பலாம் என தமிழக அஞ்சல் வட்டம் அறிவித்துள்ளது.

இந்திய அஞ்சல்துறையால் மின்னணு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும், இ-போஸ்ட் மூலம் குறுந்தகவல் வாழ்த்துக்களை அனுப்ப முடியும்.

நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களில் இ-போஸ்ட் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மின்னணு அஞ்சல் சேவை மூலம் வாழ்த்துக்கள் அனுப்புவதற்கான முன் பதிவு இன்று (14ஆம்தேதி) தொடங்கியது.

வாடிக்கையாளர் ஏ.4 அளவு கொண்ட தாளில் வாழ்த்துக்களை அனுப்புவதற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என தமிழக அஞ்சலக வட்ட தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கஷ்டப்பட்டு கூப்பிடுறாங்க... போய் வாழ்த்து அனுப்பிட்டு வாங்களேன்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+