வைரஸைக் கூட விடாத "கலாய்" மன்னர்கள்.. இங்க பாருங்க கூத்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து பணம் பறித்து வருகின்றனர். இந்நிலையில் ஹேக்கர்கள் யார் அவர்கள் எப்படி கம்ப்யூட்டர்களை ஹேக் செய்கின்றனர் என கலாய் மற்றும் காமெடி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ரேன்சம்வேர் என்ற ஹேக்கர்கள் குழு அரசு கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து பணம் பறித்து வருகிறது. வங்கிகளின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து பணம் பறிக்கக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Comedy video released on social networks about computer hacking

இந்நிலையில் கம்ப்யூட்டர்கள் மற்றும் அக்கவுண்ட்டுகளை யார் ஹேக் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்பதை கலாய்த்து காமெடியாக வீடியோ வெளியிட்டுள்ளனர். 6 இளைஞர்கள் இணைந்து நடித்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் உள்ளூர் மக்களே பணத்துக்காக ஹேக் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

விக்கீலீக்ஸ் ஜூலியன் அசான்ஜ் வரை இழுத்து பேசி கலாய்த்துள்ளனர். டெம்ப்ள் மங்கிஸ் என்ற பெயரில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hackers are hacked computers around the world. In this case, comedy video has been released on social networks as to how computers are hacked.
Please Wait while comments are loading...