திராவிடக் கட்சிகளை அழிக்க நினைக்கும் மதவாத சக்திகள் முயற்சி தோல்வியடையும்: மு.க.ஸ்டாலின்
திராவிடக் கட்சிகளை அழிக்க மதவாத சக்திகள் முயற்சித்து வருவதாகவும், அவர்களது முயற்சி தோற்று போகும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: திமுகவை அழிப்பதற்கு மதவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் முயற்சி நிச்சயம் தோற்றுபோகும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமையன்று திராவிட முன்னேற்றக் கழக வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நீங்கள்தான் அழிவீர்கள்...
திமுக அழிப்பதற்கும், ஒழித்துக் கட்டுவதற்கும் பலர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் இந்த மாபெரும் இயக்கத்தை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். எனவே திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது.

பலிக்காது
மதவாதச் சக்திகளும் திமுகவை அழிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். அவை எதுவும் பலிக்காது.

கொம்பனாலும் முடியாது
இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இங்கு வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழனின் வரலாறும் அமைந்துள்ளது.

சுயமரியாதையின் வெற்றி
இந்த நூலானது சுய மரியாதையின் வெற்றியாகும். காட்டில் வலிமையான மரத்தை வைரம் பாய்ந்த கட்டை என்போம். அதுபோல வயது முதிர்ந்தாலும் கருணாநிதியும் , க.அன்பழகனும் இன்னும் இந்த இயக்கத்துக்காக உழைத்து கொண்டிருப்பதால் அவர்களும் வைரம் பாய்ந்த இரு மாமனிதர்கள் என்றே சொல்லலாம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications