அபார்ஷன்.. பாலியல் சேட்டை வேற.. டாக்டர் செய்த வேலையை பாருங்க..போலீசுக்கு போன மருத்துவ மாணவி.. துயரம்
சேலம்: மருத்துவர் ஒருவர் சோஷியல் மீடியா மூலம் பழகி 23 வயது மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது மருத்துவ மாணவி. இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது, "நான் சித்த மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தபோது சோஷியல் மீடியா மூலம் எனக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் தமிழ்செல்வன் என்பவருக்கும் இடைய நட்பு ஏற்பட்டது.

இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாகதான் பழகி வந்தோம். நண்பர்களாகவே நாங்கள் நிறைய இடங்களுக்கு சென்றோம். இப்படி இருக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வெளியில் சென்றிருந்தபோது அவர் என்னை காதலிப்பதாக கூறினார். தொடக்கத்தில் எனக்கு இதில் விருப்பம் இல்லை. எனவே இது குறித்து ஓரிரு நாட்களில் சொல்கிறேன் என்று கூறினேன். இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய விருப்பத்தை கூறினேன். பின்னர் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம்.
எங்கள் வீட்டில் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தினேன். இவரை வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிட்டது. இப்படி இருக்கையில் கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்றிருக்கிறோம். அவர் என்னை திருமணம் செய்துக்கொள்வதாகவும், இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் கூறியிருந்தார். இவ்வாறு ஆசை வார்த்தைகூறி என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கருவுற்றேன். திருமணத்திற்கு இன்னும் நாட்கள் இருப்பதாகவும் எனவே கருவை கலைத்துவிட வேண்டும் என்று தமிழ்செல்வன் என்னை கட்டாயப்படுத்தினார்.
எனக்கு கருவை கலைப்பதில் விருப்பம் இல்லை. என்னை உடனே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர் நான் சொன்னதை கேட்கவே இல்லை. கருவை கலைப்பதிலேயே குறியாக இருந்தார். அவருக்கு தெரிந்த ஆட்களை வைத்து என்னுடைய கரு கலைக்கப்பட்டது. எனக்கு இதில் சுத்தமாக உடன்பாடே இல்லை. இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து கருவை கலைக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் அதன் பின்னர் அவர் என்னிடம் நடந்துக்கொள்ளும் விதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் எங்கள் வீட்டிற்கு சகஜமாக வந்துக்கொண்டிருந்தவர், இந்த பிரச்னைக்கு பின்னர் என்னிடம் பேசுவதையும், வீட்டிற்கு வருவதையும் தவிர்த்துள்ளார்.

ஒரு கட்டத்தில் என்னை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். இது குறித்து நான் விசாரித்தபோது என்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும், காதலை முறித்துக்கொள்ளலாம் எனவும் கூறினார். இத்தனை நாட்களாக என்னை காதலிப்பதாக கூறிவிட்டு என்னை பாலியல் ரீதியாக சுரண்டிவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருப்பது என்னை ஏமாற்றும் செயலாகும் எனவே தமிழ்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, "சோஷியல் மீடியாக்கள் மூலம் முன்பின் தெரியாதவர்களிடம் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். அதேபோல ஆண்களுக்கு சோஷியல் மீடியா ஒரு பொழுதுபோக்காக உள்ளது. எனவே இதன் மூலம் உருவாகும் உறவும் பொழுது போக்காக இருக்கிறது. இந்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையி்ன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.
-
ராமநாதபுரம் கருப்பூர் அரசு பள்ளியில் இப்படியும் ஒரு சம்பவம்.. பொதுமக்களை அதிர வைத்த புகைப்படம் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications