சாதிக் கலவரத்தை தூண்டுவது போன்று ட்வீட்டுகிறார்: கஸ்தூரி மீது போலீசில் புகார்
Recommended Video

சென்னை: சாதி கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். பல்வேறு நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூரில் கணவனை இழந்த ஆராயி அவரது மகள் பலாத்காரம் செய்யப்பட்டது, அவரின் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
பின்னர் அவர் ட்வீட்டியதாவது,
பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள். வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் 'அன்னியக்கும்பல்", Anniyar, என்பதற்கு பதில் "Vanniyar" என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்த கீச்சை நீக்குகிறேன். அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள்.
— kasturi shankar (@KasthuriShankar) February 26, 2018
வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் 'அன்னியக்கும்பல்", Anniyar, என்பதற்கு பதில் "Vanniyar" என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்த கீச்சை நீக்குகிறேன்.
அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இந்நிலையில் கஸ்தூரி சாதி கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதாக சமூக நீதி சத்ரிய பேரவை என்னும் அமைப்பினர் அதன் தலைவர் பொன்குமார் தலைமையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications