காலா கதை + டைட்டில் இரண்டும் என்னுடையது... சென்னை கமிஷனர் ஆபீஸில் அதிரடி புகார்
காலா கதைக் கரு, தலைப்பு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: காலா கதைக் கரு, தலைப்பு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 1996ஆம் ஆண்டே காலா தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 164 படத்தின் பெயர் காலா கரிகாலான் என்று கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அன்று மாலையே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பெரும் வரவேற்பு
படத்தின் தலைப்புக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இணையதளத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசை
ரஜினியோடு ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்
இந்நிலையில் ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

படக்குழு அதிர்ச்சி
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக ராஜசேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காலா படத்துக்கு ஆரம்பத்திலேயே சிக்கல் ஏற்பட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications