அமைதி துயில் கொண்ட அப்துல் கலாம்… கண்ணீர் கடலில் மூழ்கிய மக்கள்
திருப்பூர்: மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டங்கள், அமைதிப் பேரணிகள் நடைபெற்றன. அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு இரங் கல் தெரிவித்து நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

திருப்பூரில் அஞ்சலி
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவினால் நாடுமுழுவதும் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். தொழில் நகரமான திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அமைதிப்பேரணி நடத்தினர். தொழிற்சாலைகளின் முன்பு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் கண்ணீர்
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பள்ளி மாணவ-மாணவிகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பில் அப்துல் கலாம் மறைவுக்காக அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட வர்கள் தங்கள் இரங்கலை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு சின்னம் அணிந்து இருந்தனர்.

தேவதானம்பட்டியில் அஞ்சலி
தேனி மாவட்டம் தேவதானம்பட்டியில் அப்துல் கலாம் மறைவை ஒட்டி அமைதிப் பேரணி நடைபெற்றது. கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றியும், சட்டைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் துக்கம் அனுஷ்டித்தனர். பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர். ராஜேந்திரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகையும் பிராத்தனையும் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அஞ்சலி
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மெளன அஞ்சலி நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி தலைமை வகித்தார். தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமைதிப் பேரணி
திருவண்ணாமலை ப்யூரக் அமைப்பு தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், ரோட்டரி பெண்கள் அமைப்புகளின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

கண்ணீர் அஞ்சலி
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காமராஜர் சிலை பகுதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ப்யூரக் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.கவுதம்குமார், ஹெப்ரான் பள்ளி இயக்குநர் பி.டி.எல்.சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் அமைதி ஊர்வலம்
அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த நாளில் சிவகாசியை அடுத்த தாயில்பட்டி, ராமலிங்கபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் அவரது உருவப்படத்துடன் அமைதியாக பேரணி சென்றனர். இறுதியில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கண்ணீர் கடலில் மக்கள்
அப்துல் கலாம் போல ஒரு தலைவர் நமக்கு கிடைக்காது என்று ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளை இளைய சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications